சூரிய கலக்கப்போகும் அடுத்த இரண்டு படங்கள்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் சூரரைப் போற்று. ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டு உருவான இந்தப் படம் பெரிய ஹிட். திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடியில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்களும் பெரிய அளவில் டிரெண்டானது. சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா முரளி நடித்திருந்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருவா மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படங்களில் சூர்யா நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியானது. ஆனால், இந்த இரண்டு படத்திலும் சூர்யா நடிக்கவில்லை . மூன்றாவதாக, பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா.

இந்தப் படத்துக்கான கதை, திரைக்கதை வடிவமைப்பு மற்றும் முதல்கட்டப் பணிகள் முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்தப் படத்துக்கான சம்பள அட்வான்ஸும் சூர்யா பெற்றுவிட்டார்.

பொதுவாக சூர்யா ஒவ்வொரு படத்துக்கும் சம்பளம் பெறும் போதும், முதல் வேலையாக சம்பளத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் எடுத்து அவரின் அகரம் பவுண்டேஷனுக்கு கொடுத்து விடுவார். பாண்டிராஜ் படத்துக்கு பெற்ற அட்வான்ஸிலும் முதல்வேலையாக ஒரு கோடி எடுத்து கொடுத்துவிட்டாராம். எந்த நடிகரும் செய்ய துணியாத விஷயம். நிச்சயம் சூர்யா பாராட்டுக்குரியவர்தான்.