ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் யார்? தெரிவு செய்வதற்காக 13 ஆம் திகதி கூடும் கட்சியின் செயற்குழு

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரைத் தெரிவு செய்வதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை 14 ஆம் திகதி அந்தக்கட்சியின் செயற்குழு கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏற்கனவே கட்சித் தலைவர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட 8 பேரில் ஒருவரை அந்தப் பதவிக்காகத் தெரிவு செய்யவுள்ளதாகவும், பிரதித் தலைவரின் பதவிக்காக வேறு சிலரின் பெயர்களும் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் வாக்கெடுப்பின் மூலம் பிரதித் தலைவர் தெரிவு செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலகியமையை தொடர்ந்து அப்பதவிக்கான வெற்றிடம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.