நேற்று மாத்திரம் 762 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இலங்கையில் நேற்று மாத்திரம் 762 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் இது வரையில் 27 ஆயிரத்து 747 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

நாட்டில் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 375 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 22 ஆயிரத்து 831 பேர் குணமடைந்துள்ளனர். 8 ஆயிரத்து 398 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.