பாதுகாப்பான செயற்திறன் தரும் ஒக்ஸ்போர்ட் கொவிட்-19 தடுப்பூசி

ஒக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ரா ஜெனெகா இணைந்து உருவாக்கியுள்ள கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது. இது தொற்றுக்கு எதிராகச் செயற்பட்டு நல்ல பாதுகாப்பை அளிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தத் தடுப்பூசி கொரோனா பரவலைக் குறைப்பதோடு, நோய் மற்றும் மரணத்திலிருந்து பாதுகாப்பதாகவும் லான்செட் ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

20,000 க்கும் மேற்பட்ட மக்களின் மேற்கொள்ளப்பட்ட மேம்பட்ட சோதனைகளின் முடிவுகளைக் கொண்டு இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தடுப்பூசியின் ஒட்டுமொத்த செயல்திறன் 70 வீதமாக உள்ளது. வயதின் அடிப்படையில் சில தரப்பினருக்கு 90 வீதம் முதல் 62 வீதம் வரை தடுப்பூசியின் செயல்திறன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 2 சொட்டுக்கள் மருந்து அளிக்கப்பட்டவுடன் 70 சதவீதம் பேர் கொரோனா அறிகுறிகளில் இருந்து தப்பினர் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியாவில் அவசரகாலப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த அனுமதி கோரி புனேயின் சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.