கூரிய ஆயுதத்தால் தாக்கி கான்ஸ்டபிள் படுகொலை – சந்தேகத்தில் இளைஞர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய கான்ஸ்டபிள் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் அம்பாறை – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது.

இச்சம்பவத்தில் 35 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே கொலை செய்யப்பட்டார். பாலமுனையில் அமைந்துள்ள தனது உறவினர் ஒருவரின் காணி எல்லைப்பிரச்னை தொடர்பில் ஏற்பட்ட முறுகல் நிலையைச் சமாதானம் செய்ய சென்றவேளை இவரின் உறவினர் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் எனத் தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 21 வயது இளைஞன் ஒருவர் பொலிஸாரால் நேற்றுக்காலை கைது செய்யப்பட்டார்.