கோப்பாயில் சிகிச்சை பெறும் தொற்றாளியின் பிள்ளைகளுக்கு தொற்று

கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா தொற்றாளி ஒருவரின் இரு பிள்ளைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

நேற்று யாழ். போதனா வைத்தியசாலை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 380 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்படடது. இதிலேயே இவர்கள் இருவருக்கும் தொற்று உறுதி செய்ய்பபட்டது. ஏனையோருக்கு தொற்று இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.