பொது ஜன பெரமுன அரசின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேறியது – 97 மேலதிக வாக்குகள்

பொது ஜன பெரமுன அரசாங்கத்தின் கன்னி வரவு – செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு 97 மேலதிக வாக்குகளால் நேற்று நிறைவேறியது.

2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், கடந்த 17 ஆம் திகதி நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவால் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் மீதான விவாதங்கள் இடம்பெற்ற நிலையில் முதலிரு வாசிப்புக்களும் நிறைவேற்றப்பட்டிருந்தன.

நேற்றைய தினம் மூன்றாவது வாசிப்பின்மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில், வரவு – செலவு திட்டத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் – எதிராக 54 வாக்குகளும் கிடைத்தன. இதனால் 97 மேலதிக வாக்குகளால் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.