கொரோனா மரணங்கள் 146 ஆக அதிகரிப்பு – நேற்றைய தினம் 538 புதிய தொற்றாளர்கள்

கொரோனா தொற்று காரணமாக நேற்றும் இருவர் உயிரிழந்தனர் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதனால், நாட்டில் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 146ஆக அதிகரித்துள்ளது.

இதேசமயம் நேற்று மட்டும் 538 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர் என்று கொரோனாகட்டுப்பாட்டு தேசிய செயலணியின் தலைவர் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித் துள்ளார்.

இதன் மூலம் நாட்டில் மொத்ததொற்றாளர்களின் எண்ணிக்கை 30,613ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை தொற்று சந்கேத்தில் புதிதாக 716 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதேவேளை நாட்டில் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 146ஆக அதிகரித்துள்ளது.