1,000 கடற்படையினர் யாழில் தனிமைப்படுத்தல்

யாழ்.குடாநாட்டில் மட்டும் ஆயிரம் கடற்படையினர் அவர்களது முகாம்களில் தற்போது தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.குடாநாட்டில் பணியாற்றும் கடற்படையினர் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று விடுமுறையைக் கழித்த பின்பு 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனையின் பின்பே பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தல்களுக்கு உட்பட்டவர்கள் காலி, காங்கேசன்துறை, நெடுந்தீவு, மாதகல், வெற்றிலைக்கேணி எனப் பல இடங்களிலும் உள்ளனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தலிலுள்ள ஆயிரம் பேரில் பலரது தனிமைப்படுத்தல் காலம் நிறைவு பெறுவதால் அவர்கள் வெளியேறி பணிக்குத் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.