பட்ஜெட் 3ஆம் வாசிப்பு வாக்கெடுப்பு இன்று மாலை – கூட்டமைப்பு என்ன செய்யப்போகின்றது?

2021 ஆம் ஆண்டுக்கான அரசால் முன்மொழியப்பட்டுள்ள வரவு- செலவுத்திட்டத்தின் மீதான இறுதி விவாதம் இன்று வியாழக்கிழமை இடம் பெறவுள்ளது. அதற்கமைய வரவு-செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், நேற்று முன்தினம் நீதி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் விவாதம் இடம்பெற்ற நிலையில் இன்று வரவு – செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்புக்கு முன்னர் நிதியமைச்சு தொடர்பிலான விவாதம் இடம்பெறவுள்ளது.

இதேவேளையில், இவ்வாக்கெடுப்பில் எவ்வறாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தீர்மானிக்கவுள்ளது.