சாவகச்சேரியில் கோர விபத்து – இருவர் பலி

சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் பயணம் செய்த காரின் ரயர் காற்றுப்போனதையடுத்து அருகே நிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி ஒன்றுடன் கார் மோதி விபத்துக்குள்ளானது. 30 மற்றும் ஆறு வயதான இருவரே இவ்விபத்தில் கொல்லப்பட்டனர்.