மஹர சிறை மோதல்; 145 பேரிடம் வாக்குமூலம்

மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக மேலும் 29 பேரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்கு மூலத்தைப் பதிவு செய்துள்ளது.

09 சிறை அதிகாரிகளிடமும் 20 கைதிகளிடமிருந்தும் சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மேலும், மஹர சிறைச்சாலையில் இணைக்கப்பட்ட மருத்துவரிடமிருந்தும் சாட்சியம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி நேற்றைய நிலவரப்படி இதுவரை 54 சிறைச்சாலை அதிகாரிகள், 12 மருத்துவர்கள், 07 ஆண் செவிலியர்கள் மற்றும் 73 கைதிகள் என 145 பேரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.