20 நாள்களேயான சிசுவின் உயிர் பறித்த கொரோனா

பிறந்து 20 நாள்களேயான குழந்தை கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நோய் சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்தநிலையில் இந்தக் குழந்தை உயிரிழந்தது.

குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம் கொரோனா தொற்றுடன் நிமோனியா காய்ச்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் பெற்றோருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் அடிப்படையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.