கொரோனா தடுப்பூசி ஏற்றல் இங்கிலாந்தில் இன்று ஆரம்பம்

கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்குப் போடும் பணி இன்று செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தில் ஆரம்பமாகின்றது. பைசர் – பயோ என்ரெக் நிறுவனங்கள் கூட்டாகத் தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து முதன்முதலாக அங்கீகாரம் அளித்துள்ளது.

இதையடுத்து இங்கிலாந்தில் நாளை முதல் பைசர் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதனிடையே பைசர் கொரோனா தடுப்பூசி அமெரிக்கா வில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அங்கீகரிக்கப்பட்டு உடனடியாகப் பாவனைக்கு வரவுள்ளதாகத் தெரியவருகிறது.

இதேநாளில் கனடா, சுவிற்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்தத் தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டு விரைவில் பாவனைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.