ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய நவீன், சம்பிக்க, அர்ஜுன முடிவு? கட்சி யாப்பு குறித்தும் நாளை ஆராய்வு

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸநாயக்க, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளர் பாட்டளி சம்பிக்க ரணவக்க, முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமிக்கவுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் நாளை புதன்கிழமை எடுக்கப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் சஜித்பிரேமதாஸ தலைமையில் நாளை புதன்கிழமை கட்சித் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது கட்சி யாப்பு தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு,டிசெ. 08 கட்சி யாப்பை கடந்த 30 ஆம் திகதி வெளியிடுவதற்கே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், சம்பிக்க, நவீன் போன்றவர்களின் வருகை தொடர்பில் வெளியான சமிக்ஞைகளையடுத்து அது பிற்போடப்பட்டது.

சம்பிக்க ரணவக்க, நவீன் திஸாநாயக்க ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கத்துவம்பெறும் பட்சத்தில் அவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படவுள்ளன.