எகிறிச் செல்லும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை – நேற்றைய தினம் 649 பேர் பாதிப்பு

நாட்டில் நேற்றைய தினம் 649 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர் என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதனால், நாட்டில் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 877ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை தொற்று சந்ததேகத்தில் 461 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்றுவரை 20 ஆயிரத்து 460 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். 7 ஆயிரத்து 280 பேர் இன்னமும் கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சைபெற்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.