யாழ், கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை: வடக்கு ஆளுநர் அறிவிப்பு

யாழ், கிளிநொச்சி பாடசாலைகள் அனைத்துக்கும் இன்று விடுமுறை வழங்கப்படுவதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

யாழ் மற்றும் கிளிநொச்சியில் தொடர்ச்சியாக நிலவிவரும் மழையுடனான காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இன்றைய நிலைமைகளை அவதானித்த பின்னரே அடுத்தகட்ட தீர்மானங்களை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.