வெள்ளத்தையின் ஒருபகுதி, வத்தவளை உட்பட பல பகுதிகளில் நாளை காலை முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு

கொழும்பின், கொம்பனி வீதியில் அமைந்துள்ள ஹுனுப்பிட்டிய கிராம சேவையாளர் பிரிவு, கறுவாத்தோட்ட 60வது தோட்டம் வெள்ளவத்த -கோகிலா வீதி ஆகியனவும், கம்பஹாவின் ஹேக்கித்த, கெரவலப்பிட்டிய குருந்துஹென அவாரிவத்த, வெளிக்காலமுள்ள ஆகிய இடங்கள் நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படுகின்றன.

இதேவேளை கொழும்பின் ப்புளுமெண்டல் காவல்துறை பகுதி, வெல்லம்பிட்டியின் விஜயாபுர ஆகிய இடங்களின் தனிமைப்படுத்தல் நாளை அதிகாலை 5 மணி முதல் நீக்கப்படுகிறது.