நேற்றும் ஏழு பேர் மரணம் – மேலும் 501 பேருக்கு கொரோனா உறுதி

இலங்கைக்குள் கொரோனா இறப்பு எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுடன் தொடர்புடைய 7 பேர் மரணமானதை அரசாங்கம் நேற்றிரவு உறுதிப்படுத்தியதை அடுத்தே இந்த எண்ணிக்கை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மேலும் 501 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இவர்களுள் 319 பேர் பேலியகொடை கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அத்துடன் ஏனைய 182 பேரும் சிறைச்சாலை கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.