ஜனவரியில் புதிய கட்சி: நடிகர் ரஜினி அறிவிப்பு

ஜனவரி மாதத்தில் அரசியல் கட்சி தொடங்கப் போகிறார் என்றும், அதற்கான திகதியை இந்த மாத இறுதியில் – 31 ஆம் திகதி தெரிவிப்பார் என்றும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் தனது ருவிட்டர் பக்கத்தில், அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்று கூறியுள்ள ரஜினி, “மாத்துவோம் எல்லாத் தையும் மாத்துவோம்”, என்றும் “இப்போ இல்லேன்னா எப்பவும் இல்லை” எனவும் ஹேஸ்ராக்குடன் பதிவுகளை இட்டுள்ளார்.

மேலும், தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான ஊழலற்ற, சாதி, மதச் சார்பற்ற ஆன்மீக அரசியலை உருவாக்குவது நிச்சயம் என்று பதிவிட்ட அவர், “ஜனவரியில் கட்சி தொடக்கம் – டிசம்பர் 31ஆம் திகதி அறிவிப்பு” எனவும் குறிப்பிட்டுள்ளார்.