கொரோனாவை தடுக்க ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி – பெல்ஜியம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு

கொரோனா தொற்றுக்கு ஒரே ஒருமுறை போட்டாலே எதிர்ப்பு சக்தியை தொடர்ந்து அளிக்கவல்ல தடுப்பூசியை பெல்ஜியம் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

கொரோனாவை தடுக்க இப்போது உருவாக்கப்பட்டுள்ள அனைத்து தடுப்பூசிகளும் இரட்டை ‘டோஸ்’ வகையினவாகும். அதாவது, இந்த தடுப்பூசியை ஒரு முறை போட்டு பின்னர் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின்னர் மீண்டும்போட வேண்டும். இதனால் ஒருவர் 2 முறை தடுப்பூசி போடநேரிடும்.

இந்த நிலையில் பெல்ஜியம் நாட்டின் கே.யு.லுவனில் உள்ள ரெகா நிறுவனத்தில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியின் அடிப்படையில் கொரோனாவுக்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரஸின் மேற்பரப்பில் உள்ள ‘ஸ்பைக் புரோட்டின்’ மரபணு வரிசையை மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியில் செலுத்தி, இந்த தடுப்பூசியை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசிக்கு ‘ரெகாவக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

விலங்குகளுக்கு செலுத்தப்பட்ட இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த கட்டப் பரிசோதனைக்கு நிறுவனம் தயாராகி வருகின்றது.