புரெவியால் யாழ்.மாவட்டத்தில் 44 ஆயிரத்து 031 பேர் பாதிப்பு!

புரவிப் புயல் தாக்கத்தால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 13 ஆயிரத்து 289 குடும்பங்களைச் சேர்ந்த 44ஆயிரத்து 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

அத்துடன், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்கு உள்பட்ட கொடிகாமத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சங்கானை பிரதேச செயலர் பிரிவில் மாதகலில் மீனவர் ஒருவர் கடலுக்குச் சென்ற நிலையில் காணாமற்போயுள்ளார்.

பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வல்வெட்டித்துறையில் புயலின் தாக்கத்தால் 5 பேரும் சங்கானை பிரதேச செயலர் பிரிவில் ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.