3-வது ஒருநாள் போட்டி; 13 ரன்களில் இந்தியா வெற்றி

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பெராவில் இன்று நடைபெற்றது.

மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியான இன்று, டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 302 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா, வெறும் 76 பந்தில் 92 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 7 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். மறுமுனையில், ஜடேஜா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 66 ரன் சேர்த்தார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 63 ரன் எடுத்தார்.

309 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு, பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா 10 விக்கெட் இழப்பிற்கு 289 ரன் எடுத்து தோல்வி அடைந்தது.

இன்றைய போட்டியில், ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகன் விருதை பெற்றார். ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் தொடர் நாயகன் விருதை பெற்றார். மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரை ஆஸ்திரேலியா முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று கைப்பற்றியது என்பதும் குறிப்பிடத்கக்கது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை தொடர்ந்து 3 டுவென்டி டுவென்டி கிரிக்கெட் போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி பங்கேற்கிறது.