2024ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் விருப்பம்!

2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, அந் நாட்டின் குடியரசுக் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் விருந்தளித்தார்.

அப்போது இது குறித்துப் பேசிய அவர், தனது பதவிக்காலம் சிறப்பாக அமைந்ததாகவும், அடுத்த 4 ஆண்டுகளுக்கும் அதைதொடர முயற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை இயலாவிட்டால், 202ஆம் ஆண்டு 4ம் ஆண்டு மீண்டும் சந்திப்போம் எனவும் ட்ரம்ப் பேசியதாக, விருந்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.