யாழில் தொடரும் மழையால் 1138 பேர் பாதிப்பு – 140 வீடுகள் சேதம்

தொடர்ந்து பெய்து வரும் கடும் மாழை மற்றும் காற்று காரணமாக யாழ். மாவட்டத்தில் நேற்று பின்னிரவுவரை 314 குடும்பங்களைச் சேர்ந்த 1138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்தார்.

அத்தோடு ஒருவர் காணாமல்போயுள்ளார் எனவும், 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

தொடர் மழை மற்றும் காற்று காரணமாக யாழ் மாவட்டத்தில் 15 வீடுகள் முழு அளவில் சேதம் அடைந்துள்ளன. 140 வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன. இதுவரை 3 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சண்டிலிப்பாய், சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை பகுதியிலேயே அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன” என்றார்.