மஹர சிறைச்சாலைக் கலவரம்; நான்கு பிரிவுகளால் விசாரணை – அமைச்சர் உதய கம்பன்பில தகவல்

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நான்கு வெவ்வேறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று காணொளி தொழில்நுட்பம் மூலம் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு;

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கை வெளியான பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் முடிவு அறிவிக்கப்படும். சம்பவத்தின் பின்புலம் பற்றி ஆராயவேண்டும். சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைத் திணைக்களம் விசாரணை முன்னெடுக்கின்றது.

சிறைச்சாலை இராஜாங்க அமைச்சும் விசாரணை நடத்துகின்றது. நீதி அமைச்சும் ஐவர் அடங்கிய குழுவொன்றை அமைத்துள்ளது. சி.ஐ.டியினரும் தனியான விசாரணையை முன்னெடுக்கின்றனர்” என்றார்.