அம்மா மகள் என இருவரையும் காதலித்த இளைஞர் ,காதலனுக்காக மகளை அடித்து கொன்ற தாய்!

உத்திரப்பிரதேசத்தின் பிரேலி மாவட்டத்தில் வசிப்பவர் உஸ்மா(19). இவர் கெளஸர் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இதையடுத்து, கெளஸர் உஸ்மாவை மட்டும் காதலிக்காமல் அவரின் அம்மாவிடமும் காதல் வயப்பட்டுள்ளார். தாய், மகள் இருவரையும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், தாயர் முகீராவுக்கு கௌஸர் தன்னுடைய மகளை காதலிப்பதை அறிந்த அவர், சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் தன்னுடைய மகள் உஸ்மாவை கொலை செய்தால் தான் கௌஸர் தனக்கு கிடைப்பான் என முடிவு செய்த முகீரா, தன் மகளை காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டார்.

இதனால் கடந்த நாட்களுக்கு முன் இரவு கௌசரும் முகீராவும் சேர்ந்து மகள் உஸ்மாவை கழுத்தில் துப்பட்டாவை வைத்து நெரித்து கொலை செய்தனர். இதன் பின் சந்தேகம் வரமல் இருக்க தங்களின் வீட்டுக்கு திருடன் வந்ததாகவும் அவர்கள் தன்னுடைய மகளை கொலை செய்துவிட்டு, தன்னையும் தாக்கிவிட்டு சென்றதாக தாய் முகீரா போலீசில் புகார் அளித்தார்.

ஆனால், புகார் அளித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தால் தாய் முகீராவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் முகீரா தன் மகளை காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து முகீராவையும் அவரின் கள்ளகாதலன் கௌசரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.