ஜனாதிபதிக்கு சர்வதேசத்தில் அபகீர்த்தியை ஏற்படுத்த சதி – மஹர சிறைச்சாலை சம்பவம் குறித்து சபையில் வீரவன்ஸ

மஹர சிறைச்சாலையில் ஏற்படுத்தப்பட்ட அமைதியின்மை, சர்வதேச சமூகத்தின் முன்ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவப் பெயரைக் கொண்டுவரத் தூண்டப்பட்ட சதியாகும் என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரி வித்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்று அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 கைதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 71 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரம் பாராளுமன்றில் நேற்று கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

அதற்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் விமல் வீரவன்ஸ மேற்கண்ட கருத்தை சபையில் வெளியிட்டார்.