நாள்தோறும் 20ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்பட்டு வந்த இந்தக் கொரோனா தொற்று நேற்று திங்கட்கிழமை 4005 பேருக்கே ஏற்பட்டுள்ளது என பிரான்ஸ் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பிரான்ஸில் உள்ளிருப்பு நடவடிக்கை அமுலில் உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகத்தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றன.
கொரோனா சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பிரான்ஸ் அரசாங்கத்திடம் உள்ளது.
உள்ளிருப்பு நடவடிக்கையின் ஒரு சிறிய தளர்வாகக் கடந்த 28ம் திகதி சனிக்கிழமை முதல் வர்த்தக நிலையங்களை இரவு 9 மணிவரை திறப்பதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளது.
உணவகங்கள், அருந்தகங்கள் Restaurant -Bar இதில் உள்ளடக்கப்படவில்லை.
கொரோனா தொற்று 5000க்கு வரும் பட்சத்திலேயே நாட்டிலுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக பிரான்ஸ் நாட்டின் அதிபர் தெரிவித்திருந்தார்.
சனி-ஞாயிறு தினங்களில் கொரோனா பரிசோதனை நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால், கொரோனா தொற்று குறைவடைந்திருப்பதான புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.