மஹர சிறைச்சாலை மோதல் – விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் சம்பிக்கவின் அரசியல் பிரசாரம்

மஹர சிறைச்சாலையில் நேற்று பெரும் கலவரம் வெடித்தது. இதன் விளைவாக 8 கைதிகள் கொல்லப்பட்டனர். மற்றும் 50 பேர் காயமடைந்தனர். இந்த நிலைமையை கைதிகளே உருவாக்கினார்கள்.

இருந்தபோதிலும், பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க மற்றும் அவரது சமூக ஊடக ஆர்வலர்கள் குறுகிய அரசியல் நோக்கங்களை அடைவதற்காக இதனைப் பயன்படுத்த முற்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் அவர்கள் முன்னெடுத்துவரும் அரச விரோத பிரசாரங்கள் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளன.

சம்பிக ரணவக்க தனது சமூக ஊடக ஆர்வலர்களுக்கு இந்த சம்பவத்தை முழுமையாகப் பயன்படுத்தி அரசாங்கத்தைத் தாக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினதோ வேறு எந்த கட்சியினதோ தலையீடு இல்லாமல்தான் சிறைச்சாலையில் இந்த நிலைமை உருவாக்கப்பட்டது. ஆனால், அரசின் மீது கறைபூசுவதற்கு சம்பிக்க போன்றவர்கள் அனைப் பயன்படுத்துவது கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.