வெளிநாடுகளில் சிக்கியிருந்த 488 இலங்கையர் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்றுஅச்சுறுத்தல் காரணமாக நாட்டுக்கு வருகைதர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 488இலங்கையர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினர்.

இலங்கை அரசின் சிறப்பு அனுமதியுடன் ஐக்கிய அரபு இராச் சியத்திலிருந்து 370 பேரும், மாலை தீவிலிருந்து 69 பேரும், கட்டாரின் டோஹாவிலிருந்து 45 பேரும், அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து நான்கு பேரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்றுக் காலை வந்தடைந்தனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும்,தனியார் வைத்தியசாலை ஊழியர்களினால் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக ஹோட்டல்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர் என விமான நிலையத்தகவல்கள் தெரிவிக்கின்றன.