மஹர சிறைச்சாலைக் கலவரம் – ராகம வைத்தியசாலையில் ஆறு சடலங்கைள்; 37 பேர் படுகாயம்

மஹர சிறைச்சாலை வன்முறையை அடுத்து தமது வைத்தியசாலைக்கு 6 உடலங்கள் எடுத்து வரப்பட்டதாக ராகம வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

35 கைதிகளும், 2 சிறைக் காவலர்களும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரங்களையடுத்து சிறைச்சாலைக்குள் பாரிய தீ ஏற்பட்ட போதிலும், தீ அணைப்புப் படைகளின் உதவியுடன் நேற்று நள்ளிரவுக்கு மேல் அது அணைக்கப்பட்டது.