இறுதி நேரத்தில் சம்பந்தனை சந்தித்த அஜித் டோவால் – வடக்கு கிழக்கு நிலைமைகள் குறித்து பேச்சு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு வந்திருந்த இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

புதுடில்லி திரும்புவதற்கு முன்னர் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகரின் வாசஸ்தலமான இந்தியா ஹவுஸில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் இலங்கையின் அரசியல் விவகாரங்கள் குறித்தும், வடக்கு கிழக்கு நிலைமைகளையிட்டும் பேசியதாக சம்பந்தன் தெரிவித்தார்.