மேலும் 7 கொரோனா மரணங்கள் பதிவு – பலியானர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு

இலங்கையில் மேலும் 07 பேர் கொரோனாவினால் மரணமடைந்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கொழும்பு, கொத்தட்டுவ, மொரட்டுவ, அக்குரஸ்ஸ, சிலாபம் பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் மரணமானவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.