மஹர சிறைச்சாலையில் குழப்பநிலை – கைதியொருவர் துப்பாக்கி பிரயோகத்தில் பலி

இலங்கையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக கைதியொருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர்.

சிறைச்சாலையில் ஏற்பட்ட குழப்பநிலையை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகள் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவேளையே ஒரு கைதிகொல்லப்பட்டுள்ளார்.

கைதி ஒருவர் இங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டதையடுத்தே சிறைச்சாலையில் குழப்ப நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து சிறைச்சாலைக்கு அதிரடிப்படையினர் அனுப்பப்பட்டு, அவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே கைதி ஒருவர் கொல்லப்பட்டார்.