அடுத்த ஆண்டில் கனேடியர்கள் சகலருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்கும்

“2021 ஆம் ஆண்டில் அனைத்துக் கனேடியர்களும் கொரோனா வைரஸ் தடுப்பூசி யைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்று கனடா துணை தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் ஹோவர்ட் என்ஜூ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எனினும் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் ஆரம்பகாலப்பகுதியில் பலர் அதனைப் பெறக் காத்திருக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டாக்டர்ஹோவர்ட் என்ஜூ, “சாத்தியமான தடுப்பூசிகள் கிடைத்தவுடன் அவற்றை விநியோகிக்க நாடு சிறப்பான தயார்ப்படுத்தலில் உள்ளது. தடுப்பூசியின் ஆரம்ப கட்டத்தில் 30 இலட்சம் கனடியர்கள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகளை முதலில் பெறுவர். அதிக ஆபத்தில் உள்ளவர்கள், பாதிக்கப்படக்கூடிய மக்கள் மற்றும் அத்தியாவசிய தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் முதலில் தடுப்பூசி வழங்கப்படும் எனவும் ஹோவர்ட் என்ஜூ தெரிவித்தார். மேலும், கனடா 19.4 கோடி தடுப்பூசிகளைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத் திட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.