கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் இந்தியாவில் தயாராகின்றன – ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படும்

ஐரோப்பிய நாடுகளுக்கென இந்தியாவில் உள்ள பூனே நகரத்தில் இப்பொழுது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் மில்லியன் கணக்கில் தயாரிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

astra-zeneca ஆராய்ச்சி நிறுவனம் இந்த தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரித்துவருகிறது.

மும்பையில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் பூனே நகரத்திலேயே கோவிட் 19 துக்கான தடுப்பூசி இப்பொழுது தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஆறு மில்லியன் தடுப்பூசிகள் மாதமொன்றுக்கு இங்கு தயாரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய சந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகள் அனுப்பப்படுவதற்கு தயாராகிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 மில்லியன் முதல் 32 மில்லியன் தடுப்பூசிகள் இப்பொழுது தயாரிக்கப்பட்டுக்கொண்டிருப்பாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Astra zeneca நிறுவனம் இங்கிலாந்தின் பிரசித்திபெற்ற Oxfordபல்கலைக் கழகத்துடன் இணைந்து இந்த தடுப்பூசியைத் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.