உதயமானது சந்திரசேகரன் மக்கள் முன்னணி – அனுஷா சந்திரசேகரன் உருவாக்குகின்றார்

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர். சந்திரசேகரனின் புதல்வி சட்டத்தரணி அனுசா சந்திரசேகரன் தலைமையில் ‘சந்திரசேகரன் மக்கள் முன்னணி’ என்ற பெயரில் புதிய தொரு அரசியல் கட்சி உதயமாகியுள்ளது.

அத்துடன், ‘அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணி’ எனும் தொழிற்சங்கப் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு அமைப்புகளினதும் பொதுச்செயலாளராக அனுசா சந்திரசேகரன் செயற்படுவார். ஏனைய உறுப்பினர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.