கொரோனா தடுப்பூசி விநியோகம் அமெரிக்காவில் வரும் வாரம் ஆரம்பம் – ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி விநியோகம் அடுத்த வாரம் தொடங்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக முன்னணி சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனாவால் அதிக ஆபத்தைச் சந்திக்கும் மூத்த குடிமக்களுக்கு இந்தத் தடுப்பூசி வழங்கப்படும் எனவும் அவர்கூறினார்.

அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் நாளையொட்டி காணொலி வாயிலாக ட்ரம்ப் இராணுவத்தினருடன் நேற்றுமுன்தினம் உரையாற்றினார். இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அமெரிக்க நிறுவனமான மொடர்னா கொரோனா தடுப்பூசி 95 சதவீத அளவுக்கு பலனளிப்பதாக கூறப்படுகின்றது. அத்துடன் இந்தத் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அனுமதி கோரி அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டப்பாட்டு நிறுவனத்திடம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டப்பாட்டு நிறுவன அதிகாரிகள் விரைவில் கூடிஇது தொடர்பில் முடிவெடுத்து அறிவிக்கவுள்ளனர்.