ஷானி அபேசேகரவை அரசு பழிவாங்கக்கூடாது – ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து

முன்னாள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவைப் போன்ற திறமையுள்ள அதிகாரியை அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்துவது முறையற்ற செயல்பாடாகும்.

அதேவேளை, அவரை அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்துவதை நிறுத்த வேண்டும். அவரது உடல் நலனுக்கு அரசே பொறுப்புக் கூறவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“திறமையான பொலிஸ் அதிகாரியான ஷானி அபேசேகர சிறையில் அடைக்கப்பட்டு பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவர் நாட்டில் இடம்பெற்ற பல குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருக்கின்றார்” என்றார்.