காரைநகரை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி – யாழில் நேற்று 13 தொற்றாளர் கண்டறிவு

காரைநகரைச் சேர்ந்த நபருக்கு நேற்று கொரோனா வைஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் நேற்று 400 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள் ளப்பட்டன. இதில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 2 பேருக்கும் ஏனைய பிரதேசத்தைச் சேர்ந்த 13 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

நேற்றைய பரிசோதனையில் கடந்த 21ஆம் திகதி கொழும்பிலிருந்து வீடு திரும்பிய நிலையில் 25ஆம் திகதி முதல் சுயதனிமைப்படுத்தலில் இருக்கும் காரைநகரைச் சேர்ந்த நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

கிளிநொச்சியில் குடிதண்ணீர் விற்பனை நிலையத்தில் பணியாற்றியவர்களுக்கு இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையத்துக்கு பாரவூர்தி மூலம் குடிதண்ணீர் கொண்டு வந்த சாரதி ஒருவர் தனிமைப்படுத்தலிலிருந்த நிலையில் நேற்று அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த 8 பேருக்கும் பெரியகட்டு வவுனியா தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.