உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு 6.08 கோடி பேர் பாதிப்பு – 14 லட்சம் உயிரிழப்பு

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா பாதிப்புகளால் இதுவரை உலகம் முழுவதும் 14 லட்சத்து 29 ஆயிரத்து 643 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 89 லட்சத்து 83 ஆயிரத்து 715 நோயாளிகள் குணமடைந்து சென்றுள்ளனர். இவற்றில் அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலானோர் பாதிப்படைந்து உள்ளனர்.

அமெரிக்காவில் 1 கோடியே 28 லட்சத்து 77 ஆயிரத்து 783 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்நாட்டில் அதிக அளவாக 2 லட்சத்து 63 ஆயிரத்து 394 பேர் உயிரிழந்து உள்ளனர். இது மற்ற உலக நாடுகளை ஒப்பிடும்பொழுது மிக அதிகம் ஆகும்.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை வரையில் 6 கோடியே 8 லட்சத்து 51 ஆயிரத்து 988 ஆக உள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.