மத்திய கிழக்கில் 3,000 இலங்கையருக்கு கொரோனா – நிர்க்கதியான நிலையில் 45,000 தொழிலாளர்

மத்திய கிழக்கிலுள்ள 14 நாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களில் சுமார் 3,000 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்திருக்கின்றது. இதில் 70 பேர் மரணமடைந்திருக்கின்றார்கள்.

மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மூலமாகக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையிலேயே இந்த விபரங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் சுமார் 45,000 இலங்கைத் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதாகவும், அவர்கள் இலங்கைக்குத் திரும்ப முடியாமல் அந்த நாடுகளில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுவருவதாகவும் வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.