பொதுப் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றார் சரத் வீரசேகர

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவரும் ஒரு இராஜாங்க அமைச்சரும் இன்று காலை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ முன் பதவியேற்றுக்கொண்டனர்.

ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பொது பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார், பாதுகாப்பு, உள்துறை மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ பதவியேற்றார்.

சாமல் ராஜபக்ஷ தனது இராஜாங்க அமைச்சர் பதவிக்கு கூடுதலாக நீர்ப்பாசன அமைச்சராக தொடர்ந்து வருகிறார். சமல் ராஜபக்ஷ முன்னதாக உள்துறை பாதுகாப்பு, உள்துறை மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக இருந்தார்.

இன்று நியமிக்கப்பட்டுள்ள தனது புதிய இலாகாவைத் தவிர, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் இராஜாங்க அமைச்சராக வீரசேகரவும் தனது முந்தைய பதவியைத் தொடர்ந்தாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை.