கொரோனா தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கை

கொவிட் வைரசை ஒழிப்பதற்காக ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பினால் தேவையான சிபாரிசு மற்றும் அங்கீகாரம் கிடைத்த பின்னர் இலங்கைக்கு கொண்டு வருவதங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி ரஷ்ய தூதுவருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது தடுப்பூசி குறித்து கலந்துரையாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த தடுப்பூசி தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார அமைப்பு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. Covid 19 Sputnik V என்ற பெயரிலான இந்த தடுப்பூசி பரிசோதனைப் பணிகள் 3 ஆம் கட்டத்தில் இருப்பதுடன் தெரிவு செய்யப்பட்ட 45 இடங்களில் 40,000 பேருக்கு இதனை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.