இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் மரணம் – மொத்த எண்ணிக்கை 96 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலை யில் நேற்றைய தினம் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.

கொழும்பு 12 பிரதேசத்தைச்சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப் பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொரோனா தொற்றால் 2020 நவம்பர் மாதம் 23 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப் பட்ட பின்னர் ஜயவர்தனபுர வைத்திய சாலையிலிருந்து பிபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கல்லீரல் நோயால் மற்றும் கொரோனா தொற்றால் 2020 நவம்பர் மாதம் 25 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அதன் படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.