கொரோனா தடுப்பு மருந்து ஏழை நாடுகளுக்கும் கிடைக்கும் – யுனிசெப் அமைப்பு அறிவிப்பு

கொரோனாத் தொற்றுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் 2021ஆம் ஆண்டு சுமார் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் என்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஆப்கானிஸ்தான், ஏமன் மற்றும் புரூண்டி உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் என்றும், மருந்தை எடுத்துச் செல்ல 350 விமான நிறுவனங்களுடன் பேச்சு நடத்தியிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.