பால்நிலை வன்முறைக்கு எதிரான பதினாறு நாள் செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு

பால்நிலை வன்முறைக்கு எதிரான பதினாறு நாள் செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் ந. சுகிர்தராஜ் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபனால் விழிப்புணர்வு பிரசுரம் வெளியிட்டு வைக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் , உதவி மாவட்ட செயலர், யாழ் மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இணைப்பாளர் சுயீத் லேணுகாராணி ,மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.உதயிணி மற்றும் நிறுவன உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இன்று தொடக்கம் எதிர்வரும் மார்கழி மாதம் பத்தாம் திகதி வரை பெண்கள் வன்முறைக்கு எதிரான. பல்வேறு விழிப்புணர்வு செயற்பாடுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பபிடத்தக்கது.