உள்ளகப்பொறிமுறைக்கு இணங்கியிராவிடின் சர்வதேச விசாரணைதான் இடம்பெற்றிருக்கும் – கிரியெல்ல

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராயஉள்நாட்டு விசாரணைக்கு இணங்கியிருக்காவிட்டால் சர்வதேச விசாரணை நடைபெற்றிருக்கும் என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்று நிரைவேற்றப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற வரவு -செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது. இருப்பினும் தற்போது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவாகியுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் அதே நிலைமை தொடராது. மேலும் அதிகாரப் பகிர்வை வழங்கினால் நாடு பிளவுபடாது. மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதால் அனைவரும் ஒற்றுமையாக இருக்க முடியும்” என்றார்.