மாவீரர் தின நினைவேந்தல் – நீதிமன்ற தீர்ப்பையடுத்து தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று முடிவு

மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் சந்திப்பு நேற்று இடம்பெறவில்லை. இன்று மாலை வரை சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

மாவீரர்தின அஞ்சலி குறித்து தமிழ் கட்சிகள் நேற்றுக் கூடி ஆராயத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், யாழ் நீதிவான் நீதமன்றத்தின் தீர்ப்பு நேற்று வழங்கப்படவில்லை.

இன்று காலை வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படலாம் என்பதால் நேற்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ். நீதிமன்ற தீர்ப்பின் பின்னர், மாலை 4 மணிக்கு கூட்டம் இடம்பெறும்.